பள்ளிகளில் க்ரோக்ஸ் காலணிகளுக்கு தடை.. வெளியான அதிரடி அறிவிப்பு - எங்க தெரியுமா?
அமெரிக்காவில் பள்ளிகளில் க்ரோக்ஸ் காலணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
க்ரோக்ஸ்
அமெரிக்காவில் உள்ள பள்ளி குழந்தைகள் பெரும்பாலும் க்ரோக்ஸ் காலணிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த க்ரோக்ஸ் காலணி குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று கூறி அலபாமா, ஜார்ஜியா,புளோரிடா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,’’மாணவர்கள் பெரும்பாலும் இந்த க்ரோக்ஸ் காலணிகளை அணிந்து வருகின்றனர். இதில் பல கவர்ச்சிகரமான நிறங்கள் மற்றும் டிசைகளில் வருவதால் வகுப்பறையில் கவனச் சிதறல் ஏற்படுகிறது.
மேலும் சிலர் க்ரோக்ஸ் செருப்பின் பின்னால் இருக்கும் பட்டையை அணிந்து வருவதில்லை.இதனால் பள்ளியில் குழந்தைகள் நடக்கும்போது, பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இந்த சம்பவத்தில் முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களை முறிக்க வாய்ப்புள்ளது.
தடை
இதன் காரணமாகத் தான் க்ரோக்ஸ் அணிவதைத் தடைசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இதையும் மீறி க்ரோக்ஸ் அணிந்து வரும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளிகள் மட்டுமின்றி டிஸ்னி வேர்ல்டில் உள்ள எஸ்கலேட்டர்களிலும் சில மருத்துவ வசதிகள் மற்றும் ஆய்வகங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக க்ரோக்ஸ் காலணிகள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.