6, 7 மாதங்கள்தான்.. இருப்பினும் இந்த தேதிக்குள் சிசேரியன் செய்ய வற்புறுத்தும் பெண்கள் - ஏன்?
பிப்ரவரி 19 ந் தேதிக்குள் சிசேரியன் செய்து கொள்ள பெண்கள் வற்புறுத்துகின்றனர்.
அமெரிக்கக் குடியுரிமை
அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவர் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்தி வருகிறார்.
சட்டத்திற்குப் புறம்பாக (Illegal) குடியேறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது. சட்ட ரீதியாக அமெரிக்காவில் குடியேறியவர்களில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெற்றோருக்கோ அல்லது க்ரீன் கார்டு வைத்திருப்போருக்கோ மட்டுமே இனி குடியுரிமை என்ற நிலையைச் செயல்படுத்துவது போன்ற நடைமுறை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் வற்புறுத்தல்
இந்த சட்டம் வரும் பிப்ரவரி 20ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் கர்ப்பிணிப் பெண்கள், 6,7 மாதமே ஆனவர்கள் எல்லாம் பிப்ரவரி 19ந்தேதிக்குள் சிசேரியன் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, அங்குள்ள பிரசவ மருத்துவர்களை நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது.
முழுதாக வளர்ச்சியடையாத குழந்தைகளை சிசேரியன் மூலம் எடுத்தால், நுரையீரல் பிரச்னைகளும், நரம்புகள் பிரச்னைகளும் ஏற்படும் என்று கூறினாலும், அவர்கள் கவலையில்லாமல் இந்திய இளந்தாய்மார்கள் குழந்தைகளை அமெரிக்கப் பிரஜைகளாக்குவதில் ஆர்வமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.