மது பிரியர்களுக்கு குட் நியூஸ் - குறையும் போர்பன் விஸ்கியின் விலை!

Donald Trump Narendra Modi United States of America India
By Sumathi Feb 15, 2025 12:02 PM GMT
Report

போர்பன் விஸ்கி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

போர்பன் விஸ்கி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மது பிரியர்களுக்கு குட் நியூஸ் - குறையும் போர்பன் விஸ்கியின் விலை! | India Cuts Tariffs On Bourbon Whiskey

அப்போது மதுபானம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய மோடி, அமெரிக்காவின் போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரி 50 சதவீதமாக குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

வெறும் ரூ.389 மட்டுமே; ”வாடகைக்கு காதலன்” - அதுவும் நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

வரி குறைப்பு

அதன்படி, போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கான சுங்கவரி 50 சதவீதம் மற்றும் கூடுதல் வரி 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது.

bourbon whiskey

மேலும், இந்த வரி விதிப்பு போர்பன் விஸ்கிக்கு மட்டும் தான் என்றும், மற்ற மதுபானங்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் முன்னிலை நாடாக அமெரிக்கா உள்ளது.

கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. முன்னதாக இந்த வரி 150 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.