இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க; வயது வேகமாகுமாம்.. ஆய்வில் ஷாக் தகவல்!
ஆய்வு ஒன்றில் வயது முதிர்வு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு
ஏஜ் அண்ட் ஏஜிங் இதழில் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து 20 முதல் 79 வயதுடைய 16,055 பங்கேற்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிக நுகர்வு கொண்ட பங்கேற்பாளர்கள் உயிரியல் ரீதியாக குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டவர்களை விட 0.86 வயது மூத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது பொதுவாக வீட்டு சமையலில் பயன்படுத்தப்படாத ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப், சுவை மேம்படுத்திகள் மற்றும் இரண்டு கலவைகளை கலக்கும் எமல்சிஃபையர்கள் போன்ற பொருட்களைக் கொண்டது.
வயது முதிர்வு
இந்த உணவுகளில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற கூறுகள் உள்ளன. இதுகுறித்து பேசிய ஊட்டச்சத்து உயிர் வேதியியலாளரும், பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் மூத்த விரிவுரையாளரும், மருத்துவருமான பார்பரா கார்டோசோ,
“எங்கள் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் மிகப்பெரியது, எங்கள் கணிப்புகள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மூலம் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் ஒவ்வொரு 10 சதவிகிதம் அதிகரிப்பிற்கும், கிட்டத்தட்ட 2 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் இரண்டு ஆண்டுகள் 0.5 சதவிகிதம் நாள்பட்ட நோய் அபாயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.