சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? காலை எழுந்ததும் இதை செய்தாலே போதும்!
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில குறிப்புகளை தெரிந்துக்கொள்வோம்.
ரத்த சர்க்கரை
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினசரி காலையில் நீங்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளது. கார்போஹைடரேட்ஸ், புரதம், நட்ஸ் போன்றவற்றை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முழு தானிய ஓட்ஸுடன் நட்ஸ், கொட்டைகள் மற்றும் பெர்ரி பழங்கள் அல்லது பீனட் பட்டரோடு முழு கோதுமை பிரெட் மற்றும் பழங்கள் அடங்கும். சரியான அளவுதான் சாப்பிடுகிறோமா என்பதை கணக்கிட ஒரு கப் பயன்படுத்துங்கள்.
இதையெல்லாம் செய்யலாம்..
ஸ்டீல் கட் ஓட்ஸ், முழு தானியம், மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் மற்றும் பருப்புகள் போன்ற க்ளைசைமிக் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் குளுகோஸ் கரைகிறது. காலையில் சாப்பிடும் போது புரதம் சார்ந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
மேலும், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்புகள் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் சர்க்கரை அளவை குறைக்க உதவும். உணவுப்பழக்கத்தை மாற்றியும் தினசரி காலையில் ரத்த சர்கரை அளவு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.