முன் நெற்றியில் முடி உதிர்கிறதா? வளர வைக்க ஈஸியான டிப்ஸ் இதோ..
முன் நெற்றியில் முடி வளரவைக்கும் தீர்வுகள் குறித்து பார்ப்போம்.
முன் நெற்றியில் முடி
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன் நெற்றியில் முடி கொட்டுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு இயற்கையான சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி காலப்போக்கில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்துவதோடு, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி உச்சந்தலையில் தடவி விரல் நுனிகளால் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
பின், அரை மணி நேரம் அல்லது ஒரு இரவு அப்படியே வைத்து, ஷாம்புவால் கழுவி வர முடி வளர்ச்சி மேம்படும். முடி ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன், பயோட்டின் முட்டையில் நிறைந்துள்ளது. இரண்டு அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளை கருவை உச்சந்தலை மற்றும் முடியிலும் நன்கு தடவி, 30 நிமிடங்களுக்கு விடவும்.
வீட்டு வைத்தியங்கள்
பின்னர், வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு கழுவவும். தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை பயன்படுகிறது. இது, இறந்த செல்களை அகற்றி உச்சந்தலையை நன்கு பராமரிக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலை மற்றும் முடியில் தடவி மசாஜ் செய்து, 1 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.
பின்னர், குளிர்ந்த நீரில் முடியை அலசினால், முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதேபோல் இரண்டு பெரிய வெங்காயங்களை நறுக்கி நன்றாக அரைத்து,
சாற்றை மற்றும் தனியாக வடிகட்டி, ஒரு காட்டன் பஞ்சை பயன்படுத்தி வெங்காய சாற்றை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை இதை பின்பற்றுங்கள்.