இந்த 5 உணவுகளை மட்டும் சூடு செய்து சாப்பிடாதீங்க - ரொம்ப கஷ்டபடுவீங்க!
Potato
Healthy Food Recipes
Egg
Vegetables
Rice
By Sumathi
சில உணவுப் பொருட்கள் மீண்டும் சூடுபடுத்தும் போது தீங்கு விளைவிக்கும்.
உணவு சூடுபடுத்துதல்
ஒவ்வொரு நாளும் புதியதாக சமைக்கும் உணவுகளை உண்ணுவதே சிறந்தது. முந்தைய நாள் செய்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவது மோசமான செயல்முறைகளில் ஒன்று.
ஏனென்றால் முந்தைய பழைய உணவுகளில் நுண்ணுயிரிகள் வளரக்கூடும். அது நமது உடல் உறுப்புகளை பாதிக்கலாம்.
- அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவின் வித்துகள் இருக்கலாம். சமைத்த பிறகு அறை வெப்பநிலையில் அரிசியை குளிர்விக்க விடும்போது, இந்த வித்திகள் வளர ஆரம்பித்து, உட்கொண்டால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.
- உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தும் போது போட்யூலிசம் எனப்படும் ஒரு தீவிர நோயை ஏற்படுத்தும். இது பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
- இறைச்சியை மீண்டும் சூடுபடுத்தும் போது, அது புரத அமைப்பை மாற்றும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- முட்டைகளை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். குறிப்பாக அவை சமமாக சூடுபடுத்தப்படாவிட்டால் இதன் வளர்ச்சி அதிகமாகும்.
- கீரை மற்றும் பிற பச்சை காய்கறிகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.