இதை காபியில் கலந்து நரை முடியில் ட்ரை பண்ணுங்க - முடி கருகருனு மாறும்!
தலைமுடியை இயற்கையாகவே கருமையாக்குவது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
நரை முடி
சிறு வயது முதலே பலர் நரை முடிக்கு உள்ளாகி வருகின்றனர். நரை முடியை மறைக்க டை மற்றும் பல இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
டை-ஐ அதிகமாக பயன்படுத்தினால், முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே, காபியை பயன்படுத்தி, முடியை எப்படி கருப்பாக மாற்றலாம் என்பதை பற்றி பார்ப்போம். தண்ணீரில் 2 டீஸ்பூன் காபி பவுடரை கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
காஃபி பேக்
பிறகு அரை கப் மருதாணி பவுடரை அதில் கலக்கவும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலக்கவும். இது மிகவும் கெட்டியாவதற்கு அடுப்பை ஆஃப் செய்து முன்பு ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சைப் பழ சாற்றை அதில் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் 3 முதல் 4 மணி நேரம் கழித்து முடியில் தடவ வேண்டும். தலைமுடியில் தடவுவதற்கு முன் உங்கள் தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும். முடி காய்ந்ததும், அந்த பேஸ்ட்-ஐ பிரஷ் மூலம் எடுத்து வெள்ளை முடியின் மேல் தடவ வேண்டும்.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பின் தலைமுடியைக் கழுவும்போது ஷாம்பூவைப் பயன்படுத்தக் கூடாது. வெந்நீரைப் பயன்படுத்தாமல் சாதாரண தண்ணீரில் முடியைக் கழுவவும். இதனை தொடர்ந்து தடவி வர, வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக மாறும்.