முடி உதிர்தல் பிரச்சனைக்கு இதை பயன்படுத்த கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை!
மினாக்ஸிடில் பல நன்மைகள் உண்டு என்றாலும் இந்த மருந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
முடி உதிர்தல்
ஊட்டச்சத்துக் குறைபாடு ஆரோக்கியம் குறைவு , உணவு , பயணம் , மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. மற்றும் பளபளப்பான முடி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. வயதாகும்போது, நம் முடி ஆரோக்கியத்தில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.
பெரும்பாலான மக்கள் முடி உதிர்தலுக்கான ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சப்ளிமெண்ட்ஸ் அல்லது மினாக்ஸிடில் மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதனைச் சரிசெய்ய நம்மில் பலர் முடி உதிர்தலுக்கான ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மினாக்ஸிடில் மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
இதனால் உடலில் தீங்கு விளைவிக்கலாம் என் தோல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மினாக்ஸிடில் என்ன விளைவை ஏற்படுத்தும்?: மினாக்ஸிடில் என்பது தலையில் முடி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். மரபணு காரணங்களால் ஏற்படும் முடி உதிர்வைச் சரி செய்ய மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைக்கின்றனர்.
மினாக்ஸிடில்
இதில் பல நன்மைகள் உண்டு என்றாலும் இந்த மருந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மினாக்ஸிடில் மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன் பல நிபந்தனைகள் உள்ளன. இந்த மருந்தைச் சாப்பிடுவதால் தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம், உதடுகளில் எரிச்சல் மற்றும் நாக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
மேலும், இது முடியின் நிறத்தையும் மாற்றலாம். மேலும், இந்த மருந்தைச் சாப்பிடுவதால் தலைச்சுற்றல், எரிச்சல் மற்றும் சில நேரங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகியவை ஏற்படலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த மருந்துகளைச் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.