கண்கள் மற்றும் மூளையை அகற்றிய கொடூரம் - துணிச்சலாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
உக்ரைனிய பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
உக்ரைனிய பத்திரிகையாளர்
உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா(27). உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்கள் சந்திக்கும் துயரங்களை செய்திகளாக வழங்கி வந்தார். அதன்படி, 2023ல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார்.
பின் திடீரென மாயமானார். தொடர்ந்து ரோஷ்சினா, ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் மெலிடோபோல் சித்ரவதை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 757 உக்ரைன் வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
கொடூர கொலை
அதில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் என கூறி ஒப்படைக்கப்பட்ட உடல் எண் 757, ரோஷ்சினா என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பரிசோதனையில் உடலில் கீறல்கள், உடைந்த விலா எலும்புகள், கழுத்தில் ஆழமான காயங்கள் மற்றும் கால்களில் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.
மூளை, கண்கள் மற்றும் மூச்சுக் குழாய் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. பல மாதங்கள் உணவு வழங்கப்படாமல், அவர் வெறும் 30 கிலோ எடையைத் தான் கொண்டிருந்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகள் கூறியுள்ளனர். தற்போது இதுதொடர்பாக போர் குற்ற சட்டத்தின் கீழ் உக்ரைன் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
