கடவுளுடன் மனிதர்கள் பேசத் தொடங்குவார்கள்;எப்போது? கவனம் ஈர்க்கும் பாபா வங்கா கணிப்பு
கடவுள் குறித்த பாபா வங்காவின் கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு,
மனிதன் - கடவுள் தொடர்பு
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படும், இது கண்டத்தின் பெரும் மக்கள் தொகை குறைவுக்கு வழிவகுக்கும். 2028 ஆம் ஆண்டில், புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிய மனிதகுலம் வீனஸை அடையும்.
2076 க்குள், மீண்டும் உலகத்தை கம்யூனிசம் ஆழும். 2130 இல் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பு, 3005 இல் செவ்வாய் கிரகத்தில் போர் என அதிர்ச்சி கணிப்புகலை விட்டுச்சென்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக 4509ஆம் ஆண்டில் மனிதர்கள் கடவுளிடம் பேசத் தொடங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் கவனம் பெற்று வைரலாகி வருகிறது. தற்போது அவரது கணிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன.