இறந்தவர்களை தேடி தேடி திருமணம் செய்யும் பெண்கள் - காரணத்தை கேட்டீங்களா?

China Marriage
By Sumathi Apr 19, 2025 03:30 PM GMT
Report

ஒரு நாட்டில் பெண்கள் இறந்து போன சடலங்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பேய் திருமணங்கள்

சீனாவில், இறந்தவர்களை திருமணம் செய்யும் வழக்கம், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றும் அதை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

ghost marriage

திருமணம் ஆகாமல் இறந்து போனவர்கள், தங்களது மறுவாழ்வில் தனிமையைத் தவிர்க்க இது உதவும் என்று நம்புகிறார்கள்.

இறந்தவர் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டு, மணமகள் அல்லது மணமகன் போல் அலங்கரிக்கப்பட்டு, உயிருடன் இருப்பவர்களுக்கு வழக்கமான சடங்கு முறைகளை பின்பற்றி திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்தத் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன.

மியான்மர் நிலநடுக்கத்தை முன்னமே கணித்த பாபா வாங்கா - ஜூலையில் பயங்கர சுனாமி

மியான்மர் நிலநடுக்கத்தை முன்னமே கணித்த பாபா வாங்கா - ஜூலையில் பயங்கர சுனாமி

மக்கள் நம்பிக்கை

இதற்கான மணகன்/மணமகள் குடும்பங்கள் அதிக அளவில் பணத்தைச் செலவிடுகின்றன. உயிருள்ள ஒருவர் இறந்தவரின் பிந்தைய வாழ்க்கையில் பிரம்மச்சரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒரு சடலத்தை மணக்கிறார்.

china

இதனை பேய் திருமணங்கள் என்கின்றனர். அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதிலும், சில பகுதிகளில் இந்த திருமணங்கள் இன்னும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.