2 ஆண்டுகளாக கப்பலில் மட்டுமே வாழும் இளம்பெண் - இப்படி ஒரு காரணமா?
கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் கப்பலிலேயே வாழ்ந்து வருகிறார்.
கப்பல் பயணம்
இங்கிலாந்து, எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் எலன் ஹார்டி(23). இவர் கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார்.
இதுவரை, ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். தனது முதல் பயணத்தின்போது, கப்பலில் நடனக் கலைஞராக இணைந்த எலன் ஹார்டி, தற்போது ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் 3,000 பயணிகளை மகிழ்விக்கிறார்.
சம்பாத்யம்
இதன்மூலம், தனக்கான பணத்தையும் சம்பாதித்து வருகிறார். கப்பலிலேயே லூயிஸ்(28) என்பவரை காதலித்து வருகிறார். தற்போது இருவரும் சேர்ந்து உலகை சுற்றி வருகின்றனர்.
முதலில் சிங்கப்பூரில் லூயிஸை சந்தித்துள்ளார். அவர் கப்பல் மாலுமி குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.