இறந்த காதலனை திருமணம் செய்த காதலி - நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்த காதலனை பெண் திருமணம் செய்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த காதலன்
தைவான், நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் யூ என்கிற குடும்ப பெயரை கொண்ட பெண்ணும் அவரது காதலரும் விபத்துக்குள்ளாகினர்.
தொடர்ந்து அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதிய நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார். காயங்களுடன் தப்பிய யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நெகிழ்ச்சி சம்பவம்
இந்நிலையில் காதலனின் வயதான தாயை கவனித்துக்கொள்வதற்காக யூ ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அதன்படி தனது இறந்த காதலனை திருமணம் செய்துகொண்டார்.
சீனாவில் இறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது 3000-ஆண்களாகவே வழக்கத்தில் உள்ள பாரம்பரிய நடைமுறை தான்.
இந்த வகை திருமணங்களில் ஆணோ, பெண்ணோ ஒருவர் உயிரோடு இருக்க இறந்தவரின் புகைப்படம் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருள்களை கொண்டு பாரம்பரிய திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன.