பெற்றோர் எதிர்ப்பு..காதலன் இறந்த சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி!

Tamil nadu Crime
By Sumathi Aug 11, 2022 01:21 PM GMT
Report

காதலன் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அறிந்த காதலி வீட்டில் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்துள்ள சம்பவம் நெல்லையை உலுக்கியுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு

 நெல்லை, நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவருக்கு மனைவி சரஸ்வதி (47). மகன் உதயசங்கர் (20), மகள் சுதா (22) ஆகியோர் உள்ளனர். அதே பகுதியில் சுதாவின் தாய் மாமா பெரியசாமி (60) வசித்து வருகிறார்.

பெற்றோர் எதிர்ப்பு..காதலன் இறந்த சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி! | Suicide Of A Love Couple In Nellai

அவரது மகன் சுப்பையா (24). சுப்பையாவும், சுதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுப்பையாவிற்கு இரண்டு அண்ணன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

காதலன் இறப்பு 

இதனால் இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பையா வீட்டில் இருந்த பயிர்க் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.

பெற்றோர் எதிர்ப்பு..காதலன் இறந்த சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி! | Suicide Of A Love Couple In Nellai

இதனையறிந்த பெற்றோர் சுப்பையாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 காதலி தற்கொலை 

இச்சம்பவத்தால் மனமுடைந்த சுதா வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு தூக்கில் தொங்கி உள்ளார்.. சுதாவின் பெற்றோர் வந்து பார்த்ததில், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சுதாவின் தாய் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார்.

இதனை பார்த்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கூடம்

தகவல் அறிந்து வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி இது குறித்து விசாரணை நடத்தினார். இதனிடையே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் சுதாவின் உடலை பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை அறிந்த சுதாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாங்குநேரியில் பிரேத பரிசோதனைக் கூடம் இருந்தும் மருத்துவர்கள் இறந்தவர்களின் உடல்களை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், முறையாக அவர்கள் பணிக்கு வருவதில்லை எனவும்

குற்றம் சாட்டிய அவர்கள் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுதாவின் உடலை நாங்குநேரிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த நாங்குநேரி ஏஎஸ்பி., ரஜத் சதுர்வேதி அவர்களை சமாதானப்படுத்தி, தொடர்ந்து சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.