அம்மா என்ன மன்னிச்சிரும்மா.... நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசிடம் சிக்கிய கடிதம்
ஓசூர் அருகே நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி மோகனசுந்தரி. இத்தம்பதிக்கு முரளி கிருஷ்ணா (18), கீர்த்திவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் முரளிகிருஷ்ணா கடந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதினார். மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் போனது. இதனையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு படித்து வந்தார்.
தூக்கிட்டு தற்கொலை
நாடு முழுவதுமாக வரும் 17ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் பயத்தில் முரளி கிருஷ்ணா இருந்து வந்துள்ளார். இதனால், அவருக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
நேற்று மாலை யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் முரளி கிருஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்போது, முரளிகிருஷ்ணா தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் வீட்டில் கைப்பற்றினர்.
உருக்கமான கடிதம்
அந்தக் கடிதத்தில், ‘எனக்கு நீட் தேர்வு கஷ்டமா இருக்கும்மா. என்னால நீட்ல நல்ல மார்க் எடுக்க முடியாது. என்ன மன்னிச்சிரும்மா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன். ஆனால் மெடிக்கல் சீட் வாங்குற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது. நான் இந்த முடிவ எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிரும்மா. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்ம்மா...’ என உருக்கமாக எழுதியுள்ளார்.
நீட் தேர்விற்கு பயந்து மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு