நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை..!
மேட்டுபாளையத்தில் முதுநிலை மேற்படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராக இருந்த பெண் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் வயது 30 இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ராசி 27 வயதான இவர் மருத்துவராவார்.இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இவர் முதுநிலை மருத்தவ மேற்படிப்பிற்காக நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார்.
அதற்காக இவர் மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்து கொண்டிருந்தார்.
நீட் தேர்வுக்காக தாயராகி கொண்டிருந்த இவர் அத்தேர்வை நினைத்து பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் சென்றதாக தெரிகிறது.
படிக்க சென்ற ராசி மதியம் நேரம் ஆகியும் சாப்பிட வராததல் சந்தேகமடைந்த அவரது தாயார் செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது கதவு உள்பக்கம் பூட்டபட்டிருந்தது.பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது ராசி துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பம் பற்றி அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.