திருமணமான பெண்கள்..கூகுளில் அதிகம் எதை பற்றி தேடி பார்க்கிறார்கள் தெரியுமா? ஷாக் தகவல்!
திருமணமான பெண்கள் எதைப்பற்றி கூகுளில் அதிகம் தேடி பார்க்கிறார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
பெண்கள் கூகுளில்..
பெண்களின் வாழ்க்கையில் திருமண என்பது மிக பெரிய மாற்றமாகும். அந்த புதிய வாழ்க்கையில் பெண்கள் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள சிறிது நேரம் எடுக்கும். ஆனால் புதிதாக மணமான பெண்கள் கூகுளில் எதை அதிகம் தேடுகிறார்கள் தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.
திருமண வாழ்க்கையில் பெண்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கூகுளின் உதவியை எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கணவனை பற்றி
பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கூகுளில் தங்கள் கணவர் தொடர்பான பல விஷயங்களைத் தேடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளை கூகுளில் அதிகம் தேடுவார்கள்.
ஏனென்றால் தன் கணவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காதது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் எப்போதும் அதை கணவரிடம் நேரடியாகக் கேட்காமல் கூகுளில் தேடுகிறார்கள் எனப்படுகிறது.
கணவனை அடியாமையாக்குவது எப்படி?
புதுமண பெண்கள் கூகுளில் கணவனை அடியாமையாக்குவது எப்படி? என்பதை தான் அதிகம் தேடுகிறார்களாம். சில பெண்கள் தங்கள் கணவனை அடிமைப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய கூகுளை நாடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, கணவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்.
அதனால் தான் கணவன்மார்களை மகிழ்விக்க அவர்களுக்கு பிடித்த உணவுகளை தெரிந்துகொள்வது. மற்றும் பரிசு பொருட்களை அதிகம் வாங்கி கொடுப்பது போன்று செய்கின்றனர்.
குழந்தைகளைப் பெற வேண்டுமா?
திருமணத்திற்குப் பிறகு கூகுளில் அதிகம் தேடப்படும் விஷயங்களில் குழந்தைகளும் ஒன்று.
குழந்தை பிறக்க எந்த மாதம் சிறந்தது? எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது? கருவுற்றபிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்பதும் பெண்கள் கூகுளில் அடிக்கடி தேடும் விஷயங்களாம்.