2023: கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் இவரா? சுவாரஸ்ய லிஸ்ட் இதோ!
கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிகம் தேடப்பட்டவர்கள்
கூகுள் நிறுவனம் 2023-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுப்மன் கில், முகம்மது ஷமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பத்து இடத்தில் முதல் இடம் பெற்றுள்ளார் கியாரா அத்வானி. இவர் கடந்த ஆண்டு சித்தார்த்தை திருமனம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, கியாராவின் திருமன வீடியோக்கள், அவரின் புடவையின் விலை, சித்தார்த் வயது, விருதுகள் ஆகியன கூகுளில் தேடப்பட்டுள்ளது.
கூகுள் பட்டியல்
இரண்டாவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சும்மன் கில் இடம்பிடித்துள்ளார். இவரின் சிறப்பான விளையாட்டு திறமையால் விராட் கோலிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் செய்த சாதனைகள் ,ஒய்வு பெறும் காலம், சொத்து மதிப்பு மற்றும் சாரா டெண்டுல்கர் பற்றி அதிகம் தேடப்பட்டுள்ளது.
முன்றாவது இடத்தில் சச்சின் ரவீந்திரா, இந்த ஆண்டில் நடந்த உலக கோப்பையில் அறிமுகமாகி நியூசிலாந்து அணிக்காக களம் இறங்கிய இவர் தனது முதல் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார். இவரை பற்றிய விவரங்கள் அதிகம் தேடப்பட்டுள்ளது.
மேலும் முகம்மது ஷமி, உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எனவே, இவரது மொத்த விக்கெட்டுகள் பற்றி தேடப்பட்டுள்ளன.
தொடர்ந்து எல்விஷ் யாதவ், சித்தார்த் மல்ஹோத்ரா, க்ளன் மேக்ஸ்வெல், டேவிட் பெக்கம், சூரியகுமார் யாதவ், டிராவிஸ் ஹெட் குறித்தும் தேடப்பட்டுள்ளது.