சந்திரயான் 3 முதல் ஜவான் வரை.. 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் - டாப் பட்டியல் இதோ!

Google India
By Jiyath Dec 13, 2023 04:08 AM GMT
Report

கூகுள் தளத்தில் இந்திய மக்கள் அதிகமாக தேடிப் படித்த தகவல்கள் தொடர்பான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் தேடல்கள்  

2023ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் கூகுள் தளத்தில் இந்திய மக்கள் அதிகமாக தேடிப் படித்த தகவல்கள் தொடர்பான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 முதல் ஜவான் வரை.. 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் - டாப் பட்டியல் இதோ! | Omplete Year In Google Search 2023 List

இதில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திர சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளும், இஸ்ரேல் போர் நிகழ்வுகள் 3வது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் சதீஷ் கௌஷிக், பட்ஜெட் 2023, துருக்கி நிலநடுக்கம், ஆதிக் அஹமது, மேத்தீவ் பெர்ரி, மணிப்பூர் செய்தி, ஒரிசா ரயில் விபத்து ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்திய அளவில் டாப் தேடல்கள்

1. ஜி20 என்றால் என்ன?

2. யு.சி.சி என்றால் என்ன? (பொது சிவில் சட்டம்)

3. ChatGPT என்றால் என்ன?

4. ஹமாஸ் என்றால் என்ன?

5. 28 செப்டம்பர் 2023 என்றால் என்ன?

சந்திரயான் 3 முதல் ஜவான் வரை.. 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் - டாப் பட்டியல் இதோ! | Omplete Year In Google Search 2023 List

டாப் விளையாட்டு நிகழ்வுகள்

1. இந்தியன் பிரீமியர் லீக்

2. உலக கோப்பை கிரிக்கெட்

3. ஆசிய கோப்பை

4. மகளிர் பிரீமியர் லீக்

5. ஆசிய விளையாட்டு

டாப் திரைப்படங்கள்

1. ஜவான்

2. காதர் 2

3. ஓபன்ஹைமர்

4. ஆதிபுருஷ்

5. பதான்