யாரு சாமி நீ.. 12 மனைவிகள், 578 பேரப்பிள்ளைகள் - ஒரு கிராமத்தையே உருவாக்கிய ஒற்றை நபர்!
12 மனைவிகள் 102 குழந்தைகள் 578 பேரப்பிள்ளைகளுடன் வசிக்கும் மனிதர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
12 மனைவிகள்
இன்றைய காலகட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற காலம் மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலைக்கு பெரும்பாலான மக்கள் சென்றுவிட்டனர்.ஆனால் உகாண்டா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 100 குழந்தைகளைப் பெற்றெடுத்து 12 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கிழக்கு ஆசிய நாடான உகாண்டாவில் பலதார திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு.அங்கு வசித்து வரும் முசா ஹசாஹ்யா என்பவர் 1972 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவருக்கு அப்போது 17 வயது. விவசாயம் மற்றும் மாட்டிறைச்சி விற்று செல்வாக்காக வாழ்ந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக உகாண்டாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும் பெண்களைத் திருமணம் செய்துள்ளார். மேலும் 102-வது குழந்தை பிறந்த பின் தான் இனி யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவு செய்துள்ளார்.
உகாண்டா
தற்பொழுது முசா ஹசாஹ்யாவிற்கு 70 வயதாகிறது. 12 மனைவிகள் 102 குழந்தைகள் 578 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.முதிர்ச்சியின் காரணமாக முசா, தற்போது குடும்பத்தை நடத்தப் போதுமான பணம் இல்லாமல் ஏழ்மையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏழ்மையான சூழலில் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாகத் தான் கடப்பதாக்க முசாவின் மனைவிகளும் குழந்தைகளும் கூறுகின்றனர்