இது நாட்டுகே ஆபத்து..இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் போட்ட பிளான் -தெரிந்தே சீனாவிடம் சிக்கியது எப்படி?
சீனாவிடம் இருந்து 40 ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 என்று அதிநவீன வசதி கொண்ட போர் விமானங்களைப் பாகிஸ்தான் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடிவருவது தான்.இதனால் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான சீனாவுடனும் நல்ல உறவு இல்லை.இதற்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது எல்லை பிரச்சனை தான் . இதனால் பல சமயங்களில் நம் நாட்டு ராணுவ வீரர்களுடன் சீனா மோதி உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் தனது விமானப்படையைப் பலப்படுத்தும் நோக்கில் சீனாவிடம் இருந்து 40 ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 என்று அதிநவீன வசதி கொண்ட போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானும், சீனாவும் ஒன்று சேர்ந்து இந்தியாவை மிரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான்
தற்போது பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த சூழலில் 40 போர் விமானங்களைச் சீனாவிடம் இருந்து வாங்கும்போது அது அந்த நாட்டுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த முடிவைப் பாகிஸ்தான் எடுத்துள்ளது என்றால் அதன் பின்னணியில் சீனா இருக்கலாம் எனச் சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.