இந்திய வான்பரப்பில் எலான் மஸ்க் செய்த செயல் - எல்லாம் பொய் என அவரே விளக்கம்

Elon Musk India Manipur Starlink
By Karthikraja Dec 18, 2024 03:02 PM GMT
Report

ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயல்படவில்லை என எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் குக்கி மற்றும் மெய்தி இனக்குழுவினருக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 

elon musk starlink

சமீபத்தில் மணிப்பூரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் சூராசந்த்பூர், சண்டல் பகுதியில், இந்தியா ராணுவத்தின் ஸ்பியர்கார்ப்ஸ் பிரிவு பிற பாதுகாப்பு அமைப்புகளுடன் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தியது. 

இந்தியாவிற்கு வரும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் - கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

இந்தியாவிற்கு வரும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் - கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

ஸ்டார்லிங்க்

இதில், ஸ்னைப்பர்கள், தானியங்கி ஆயுதங்கள், துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் போர் தளவாடங்கள் உட்பட 29 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஸ்பியர்கார்ப்ஸ் பிரிவு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. 

இந்த பதிவில் கருத்து தெரிவித்த பயனர் ஒருவர், "ஸ்டார்லிங்க் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. எலான் மஸ்க் இதைக் கவனித்து இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவார் என நம்புகிறேன்" என்று கூறினார்.

எலான் மஸ்க் விளக்கம்

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இது தவறான தகவல். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கதிர்கள் இந்தியாவில் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார். 

ஸ்டார்லிங்க் என்பது செயற்கைகோள் மூலம் நேரடியாக இணைய சேவை வழங்கும் நிறுவனமாகும். ஸ்டார்லிங்க் 100க்கு மேற்பட்ட நாடுகளில் சாட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது.