துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான பரபர தகவல்!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Sumathi Jan 11, 2024 10:03 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்(46) சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 2 வருடத்திற்குள்(2022) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

udhayanidhi-stalin

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதன்பின், அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

சொன்னது போல பிரதமர் மோடி இந்தியாவையே மாத்திட்டாரு - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

சொன்னது போல பிரதமர் மோடி இந்தியாவையே மாத்திட்டாரு - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர்?

ஆனால், தற்போது வருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 21ம் தேதி சேலம் இளைஞரணி மாநாடு நடத்திய ஒரு சில தினங்களில் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்? வெளியான பரபர தகவல்! | Udhayanidhi Stalin Becoming Deputy Chief Minister

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.28ம் தேதி வெளிநாடு செல்வதற்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.