சொன்னது போல பிரதமர் மோடி இந்தியாவையே மாத்திட்டாரு - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin Narendra Modi India
By Sumathi Sep 09, 2023 09:34 AM GMT
Report

இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாரத் 

ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறவுள்ளது.

சொன்னது போல பிரதமர் மோடி இந்தியாவையே மாத்திட்டாரு - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin About Modi Bharath Issue

இதில், உலக நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு அந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கையின் முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமர்சனம்

இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், வாழ்த்துகள், 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார் என்றார்.

சொன்னது போல பிரதமர் மோடி இந்தியாவையே மாத்திட்டாரு - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin About Modi Bharath Issue

பின் சனாதான சர்ச்சை தொடர்பாக பேசியதில், திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.