சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலிக்கும்...உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!
சனாதன விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சனாதனம் ஒழியும் வரை தன் குரல் ஒலிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி உரை
தெற்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது,. இந்த கூட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், அம்பேதகர் பெரியார் போன்றோர் எதற்காக போராடினார்களோ அதனை பற்றி தான் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
எல்லாமே நிலையானது, எதையுமே மாற்றக்கூடாது என்பது தான் சனாதனம் என குறிப்பிட்ட உதயநிதி, எல்லாவற்றையும் மாற்றி காட்டவோம் எல்லாவற்றையும் கேள்வி கேட்போம் என்று ஆரம்பிக்கப்ட்டது தான் திமுக என பெருமிதம் கூறினார்.
திரித்து பேசும் பாஜக
தொடர்ந்து பேசிய அவர், தான் பேசியதை பாஜகவினர் திரித்து பேசுகின்றனர் என குற்றம்சாட்டி சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என பேசியதை, இனப்படுகொலைக்கு தூண்டியதாக பாஜகவினர் பேசிவருவதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் உண்மையில் இனப்படுகொலை செய்வது பாஜக தான் தெரிவித்த அவர், குஜராத், ஹரியானா மாநிலங்களில் இனப்படுகொலையை செய்து வருவது மத்திய பாஜக அரசு தான் என சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்ய தவறிவிட்டதாக தெரிவித்த அவர், ஆனால் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தாக மேடையில் கூறினார்.