ஆக.,19ல் துணை முதல்வராகும் உதயநிதி? தீயாய் பரவும் தகவல்!
ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய துறைகளுடன் கொண்ட துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் திமுக அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்த தகவலும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், 'உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
அமைச்சர் தகவல்
இந்நிலையில், ராமநாதபுரத்தில் 'தமிழ்ப்புதல்வன்' திட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், 'துணை முதல்வர் உதயநிதி' என கூறிவிட்டு,
அடுத்த நொடியே, 'சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார்; அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது' எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.