துணை முதல்வர் பதவி யாருக்கு தான் வேண்டாம் - அமைச்சர் துரைமுருகன் பதில்
தமிழகத்தில் துணை முதல்வர் பதவி குறித்து பேச்சுக்கள் அதிகரித்துள்ளது.
துணை முதல்வர் பதவி
2022-ஆம் ஆண்டு திமுக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்பட்டவுடனேயே அடுத்து அவருக்கு துணை முதல்வர் தான் வழங்கப்படும் என திமுகவினரை தாண்டி எதிர்க்கட்சிகள் பேசி வருகிறார்கள்.
தற்போது வரை அப்பேச்சுக்கள் அடங்கவில்லை. கட்சிக்காக அனைத்து தேர்தல்களிலும் மும்முரம் காட்டும் உதயநிதியை வெகுவாக பாராட்டி பேசினார் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
அவரை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜும், பேசும் போது உதயநிதி துணை முதல்வராகும் தகுதி இருப்பதாக பேசினார்.
யார் தான்...
இதனை தொடர்ந்து அதிகரித்தது இந்த பேச்சுக்கள். இளைஞர் அணி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்களாகிய நாங்கள் அனைவரும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்து அமைப்பாளர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்பார்கள் என்று பேசினார்.
இந்த நிலையில் தான் இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரை முருகன் பேசும் போது, துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள் எந்த தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், இது எல்லாரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என சுட்டிக்காட்டி, கூட்டு முயற்சியால் எடுக்கப்பட வேண்டிய விஷயம் எனக் கூறினார்.