எத்தனை அமைச்சர்கள் உள்ளார்கள் - அதெப்படி உதயநிதிக்கு துணை முதல்வர்? இபிஎஸ் கேள்வி
செய்தியாளர் சந்திப்பு
சேலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற வந்த போது, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்காக, குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 664இடங்களில் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தினார்.
இந்த உணவகத்தை திமுக ஆட்சியில் சரியாக செயல்படவில்லை. தரமான பொருட்கள் கிடைக்கவில்லை, அதனால் சரியான உணவுகள் இல்லை, அதன் வருகை தருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதே போல, ஊழியர்களுக்கும் பாதியாக குறைக்கப்பட்டார்கள். சென்னையில் 407 அம்மா உணவகங்கள் இருந்தன.
கேட்காதீர்கள்
திமுக ஆட்சியில் 19 உணவகம் மூடப்பட்டது. ஆய்வு செய்வதாக நேற்று சென்ற முதல்வர், இந்த 3 ஆண்டுகள் ஏன் செய்யவில்லை. அம்மா உணவகத்தை சரியாக நிர்வகிக்கவில்லை. மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனாலேயே இப்பொது ஆய்வு செய்து நிதி ஒதுங்குகிறார். காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை.
எங்கே பார்த்தாலும் கஞ்சா போதை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. 200 நாட்களில் 595 கொலைகள் நடந்து சரித்திரம் படைத்துள்ளது இந்த அரசு. ஓபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். இது பற்றி இனியும் கேள்வி கேட்காதீர்கள்.
இன்றைக்கு ஆம்ஸ்ட்ராங், ரேஷன் பொருட்கள் பிரச்சனை இருக்கிறது. ஆனால், அதனை பற்றி விவாதம் இல்லை. எப்போதும் அதிமுக தான். வேண்டுமென்றே அதிமுக மீது அவதூறு பரப்புவது நிறுத்துங்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சட்டத்துரை அமைச்சர் தானே யார் கொலை செய்தார்கள் என்பதை கூறணும். நாங்கள் எப்படி சொல்வது.
எப்படி..?
தானாக வந்து சரணடைந்தவரை என்கவுண்டர் செய்கிறார்கள். இதை பற்றி கேட்டால் அவர்களுக்கு கோபம் வருகிறது. இதெல்லாம், அதிமுக ஆட்சி வந்ததும் தோண்டி எடுக்கப்படும். 21 மக்களவை தேர்தல் நிர்வாகிகள் கருத்துக்களை கேட்டு குறித்து அற்புதமாக கூட்டம் நடந்துள்ளது. துணை முதல்வர் குறித்து கேட்கப்பட்ட போது, எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
இதனை எப்படி ஏற்க முடியும். கலைஞர் பேரன் என்பதால் கொடுப்பதா? குடும்ப ஆட்சியாக மாறிவருகிறது. எத்தனை அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் திமுக உள்ளார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.