செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கல் இது! எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடியார் கண்டனம்

V. Senthil Balaji ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick Jul 16, 2024 09:46 AM GMT
Report

அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதானத்திற்கு கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன,இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

edapadi palanisamy angry

முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

MR vijayabaskar senthil balaji

அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார் - இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ரூ100 கோடி நில மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

ரூ100 கோடி நில மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

கைது

முன்னதாக, கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் வாங்கல் என்பவர் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது அளித்திருந்தார். அதில், கரூரின் தோரணக்கல்பட்டி, குன்னம்பட்டியில் ஆகிய கிராமங்களில் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் - சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் உதவியோடு தன் மனைவி, மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

MR vijayabaskar

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உட்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. சில நாட்களாக தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.