ரூ100 கோடி நில மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
கரூர்
கரூரை சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டதாக சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. மேலும் 2 முறை அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இந்நிலையில், ஆந்திரா அல்லது கர்நாடக போன்ற மாநிலங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் 5 தனிப்படை அமைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை கேரளாவில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டுள்ளது.