உதயநிதி தான் துணை முதல்வர்? நேரம் குறிச்சாச்சு..ரகசியத்தை உடைத்த அமைச்சர்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதிக்கு பிறகு துணை முதலமைச்சர் ஆவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் சூசகமாக தெரிவித்துள்ளார் .
துணை முதலவர்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு மாவட்டங்கள் தொடங்க வாரியாக அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
அப்போது இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத்துறையில் திறன் வளர்ச்சி திட்ட பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர்,'' உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலமைச்சர் " என்று கூறினார்.
மேலும் இது குறித்து வரும் 19ஆம் தேதிக்குப் பிறகு தான் தெரிய வரும் . அதன் பிறகு அமைச்சர் உதயநிதிஸ்டாலினை துணை முதலமைச்சர் என்று கூற வேண்டும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.