அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ் கனி இடையே கடும் வாக்குவாதம் - கீழே விழுந்த கலெக்டர்
ராமநாதபுரத்தில் அமைச்சர் எம்.பி ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ஆட்சியர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர், எம்.பி இடையே கடும் வாக்குவாதம்
ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பை போட்டியில் வென்றோருக்கான பரிசளிப்பு விழாவின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்ததால் விழா முன்னதாக தொடங்கப்பட்டது.
விழாவில் முன்பே தொடங்கியது தொடர்பாக எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கீழே விழுந்த ஆட்சியர்
இதனை தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இந்த தள்ளுமுள்ளுவில் ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதால் அவர் கீழே விழுந்துள்ளார். பின் போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.