பெரும்பாலான சவாரிகள் கேன்சல்.. ட்ரிக் செய்து 23 லட்சம் சம்மதித்த 70 வயது ஊபர் டிரைவர்!

United States of America
By Vinothini Nov 07, 2023 07:50 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஊபர் டிரைவரான முதியவர் ஒருவர் சாமர்த்தியமாக 23 லட்சம் சம்பாதித்துள்ளார்.

டாக்சி

தற்பொழுது உள்ள டிஜிட்டல் உலகில் பணம் பரிவர்த்தனை முதல் அனைத்துமே ஆன்லைன் மூலமாக செய்து வருகின்றனர். அதுபோல சமீபத்தில் ஊபர் மற்றும் ஓலா தளங்களில் புக் செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

uber

அதில் கிலோ மீட்டரை அளவாக வைத்து பணம் வசூலிக்கப்படுவதால், வழக்கமாகக் கொடுக்கும் பணத்தை விடச் சற்று குறைவாகக் கொடுப்பதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த `பில்’ என்ற 70 வயது நபர் தனது பயணங்களை ரத்து செய்தே 23 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற இவர், பார்ட் டைம் வேலையாக ஊபரில் பணிபுரிந்து வருகிறார். ஆனால் இவர் பெரிதாக சவாரிக்கு செல்வதில்லை, பெரும்பாலும் நிராகரித்த விடுவார்.

தலையை பிளந்து அறுவை சிகிச்சை - நடுவில் பியானோ வாசித்து மிரள வைத்த நோயாளி!

தலையை பிளந்து அறுவை சிகிச்சை - நடுவில் பியானோ வாசித்து மிரள வைத்த நோயாளி!

ட்ரிக்ஸ்

இந்நிலையில், அவர் எப்படி அதனை சம்பாதித்தார் என்று கூறியுள்ளார். அதில், "இல்லை என்று சொல்லியே நான் பல காலம் கடத்தினேன். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவில் 10 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை, விமான நிலையங்கள் மற்றும் பார்கள் போன்ற இடங்களுக்கு சென்றுவிடுவேன்.

uber

ஒரு விமானம் தரையிறங்கும்போது மக்கள் ஊபரை நாடுகிறார்கள், அப்போது கட்டணம் கடுமையாக உயர்கிறது. 20 நிமிட சவாரியின் பணம் 10, 20, 40 ஏன் சில நேரங்களில் 50 அமெரிக்க டாலர்கள் வரை கூட செல்லும். ஓட்டுநருக்கு 50 சதவிகிதம் குறைவாகவே கிடைக்கும். எனவே 35 நிமிட சவாரியில் உங்களுக்கு 30 முதல் 60 அமெரிக்க டாலர் வரை கிடைக்கும்.

அதேசமயம் ஒன்-வே ரைடுகளையும் நான் தவிர்த்து விடுவேன். 10 சதவிகிதத்திற்கும் குறைவான சவாரிகளே சென்றுள்ளேன். நான் வருமானத்திற்காக ஊபரை நம்புவதில்லை. நான் வெளியே செல்வதற்காக ஓட்டுகிறேன்.

எனக்குப் பணம் தேவையில்லை. எனக்கு இது பிடித்துள்ளது" என்று கூறியுள்ளார். ஆனால் இதில் நிறைய ரிஸ்க் உள்ளது, டிரைவரின் டெஸ்டிநேஷன் (destination) காரணமாகத் தொடர்ந்து பயணத்தை மறுப்பது மற்றும் ரத்து செய்வது ஓட்டுநரின் அக்கவுண்ட்டை ரத்து செய்ய வழிவகுக்கும்.