பயணிகள் கவனத்திற்கு.. இத்தனை நாட்களுக்கு ஓலா, ஊபர் கால் டாக்சி இயங்காது!
வாடகை கார் ஓட்டுநர்கள் இன்றுமுதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வாடகை கார்
ஓலா, ஊபர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும்,
நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.
வேலைநிறுத்தம்
மேலும், பைக் டாக்சி முறையை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இதனை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கால் டாக்சி ஓட்டுநர்கள், வரும் 18ஆம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.