UAE விசா விதிகளில் புதிய மாற்றம்..இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - என்ன தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரகம் இந்திய மக்களுக்கான விசா விதிகளில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.
விசா
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வழியாகத் தான் பயணம் செய்கின்றனர்.அப்படி அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட எதாவது ஒரு நாட்டில் விமானத்தை மாற்றுகின்றனர்.
இதனால் அந்த பகுதி சுற்றுலாத்தலமாக்க மாறுகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லண்டன் ஆகிய 3 நாடுகளிலிருந்து விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஆன்-அரைவல் விசா சலுகை அளித்து வந்தது.
புதிய மாற்றம்
இந்த நிலையில், இந்திய மக்களுக்கான விசா விதிகளில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த விசாவ பெற இந்தியப் பயணிகள் UAE இல் நுழைந்த தேதியிலிருந்து குறைந்தது 6மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைக் வைத்திருக்க வேண்டும்.
இந்த விசா பெறக் கட்டணம் உள்ளது. 100 திராஹாம்-க்கு 14 நாள் விசா கிடைக்கும். Dh250 கட்டணம் செலுத்தி மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கலாம். இதேபோல் நீண்ட காலம் தங்க வேண்டும் என்றால் Dh250க்கு 60 நாள் விசா பெற முடியும். 1 திராஹம்-ன் இன்றைய மதிப்பு 23.62 ரூபாயாகும்.