உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?
கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கள்ளக்காதல்
உலகம் முழுவதும் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது தம்பதிகளில் ஒருவரின் திருமணம் மீறிய உறவு.மேலும் ஆன்லைன் டேட்டிங், பாலின ஈர்ப்பு மட்டுமின்றி நெருக்கமான உறவில் ஈடுபடும்போது இந்த உறவு ஏற்படுகிறது .
இது குறித்து சமீபத்தில் திருமணம் மீறிய உறவு வைத்துள்ளவர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முதலில் அமெரிக்காவோ அல்லது வேறு ஏதாவது ஐரோப்பிய நாடோதான் பதிலாக இருக்கும் என்று நமக்குத் தோன்றும்.
ஆனால் இல்லை. அது ஒரு ஆசிய நாடு. தாய்லாந்து நாட்டில் தான் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிக அளவில் உள்ளது. இங்கு 51 சதவீத மக்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளனர்.
டாப் 10 நாடுகள்
2வது நாடு டென்மார்க் உள்ளது. இந்த நாட்டில் 46% பேர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர். 3வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. ஜெர்மனியில், சுமார் 45% மக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துணைவர்கள் உள்ளனர்.
4வது இடத்தில் இத்தாலி உள்ளது. இங்குக் கிட்டத்தட்ட 45 % மக்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுகின்றனர். 5வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இங்கு சுமார் 43 % மக்கள் தங்கள் திருமணம் மீறிய உறவைக் கொண்டுள்ளனர்.
6 வதுநார்வே உள்ளது.நார்வேயில் 41 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளார்கள். இந்த பட்டியலில் பெல்ஜியத்தில் 40 சதவீத மக்கள் திருமணம் மீறிய உறவுகளைக் கொண்டுள்ளனர். தொடர்ந்து ஸ்பெயினில் 39 சதவீதமாகவும், United Kingdom-ல் 36 சதவீதமாகவும், கனடாவில் 36 சதவீதமாகவும் உள்ளது.