உலக அளவில் சிங்கப்பூர் தான் முதலிடம்- எதற்கு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் தரவரிசை பட்டியல் விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட்
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஆய்வு நடத்தியது. அதில், உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2 வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளது.இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 190 நாடுகளுக்குப்பயணிக்க முடியும்.
வெளிநாட்டில் நிரந்தரமா குடியேறனுமா? இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் - முழு விவரம் இதோ!
தரவரிசை பட்டியல்
3வது இடத்தில் டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் 7 நாடுகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 189 நாடுகளுக்குச்பயணிக்க முடியும்.
இந்த வரிசையில் அமெரிக்கா 9 வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 183 நாடுகளுக்குப்பயணிக்க முடியும். இதனை தொடர்ந்து இந்தியா 80-வது இடத்தில் உள்ளது.
இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும். இந்த தரவரிசைப் பட்டியலில் கடைசி 99-வது இடத்தில்ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 25 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும்.