அமெரிக்க விசா விரைவாக கிடைக்க.. அனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள் - காரணம் என்ன?
அமெரிக்க விசா விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுமன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அமெரிக்க விசா
குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத்தில் என்ற பகுதியில் சமத்காரி அனுமன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலின் சிறப்பு அனுமனை மனமுருகி வேண்டிக் கொண்டால், உடனடியாக விசா கிடைத்து விடும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக இந்த கோவிலுக்குச் சாதாரண நாள்களில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமனைத் தரிசிக்கச் செல்வர். ஆனால் தற்பொழுது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டவர்கள் இந்தக் கோவிலுக்கு வருகை தருவது அதிகமாகி உள்ளது.
![வெளிநாட்டில் நிரந்தரமா குடியேறனுமா? இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் - முழு விவரம் இதோ!](https://cdn.ibcstack.com/article/e1545fcf-634f-4f27-a4cb-b870451f0593/25-67933f1b8a25f-sm.webp)
வெளிநாட்டில் நிரந்தரமா குடியேறனுமா? இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்கும் 5 நாடுகள் - முழு விவரம் இதோ!
மேலும் கடந்த மாதம், 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார் . அப்போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளோரை வெளியேற்றுவது, வேலை பார்க்க வருவோருக்கான விசாவை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.
அனுமன் கோவில்
இந்த நிலையில், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவை அதிகம் பெறும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.அதிபர் டிரம்பின் அறிவிப்புகள், அமெரிக்க விசாவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என்று விசா அனுமன்கோவிலுக்கு ஆயிரக்கணக்கானோர் இந்தக் கோவிலுக்குப் படை எடுத்து வருகின்றனர். எச்1பி விசா என்பது, அமெரிக்காவில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்ய அனுமதிக்கும் விசா ஆகும்.
இந்த விசாவைப் பெற்றவர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்யலாம்.