பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆபாச படம் எடுத்து ரிடையர்டு மாஸ்டர் செய்த காரியம் - அதிர்ச்சி!
ரிடையர்டு மாஸ்டர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி 68 வயதான இவர் அதே பகுதியில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வருகிறார். இது நகரில் மையப்பகுதி என்பதால் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணமான இளம்பெண்கள் என பலர் இங்கு வருகின்றனர்.
இந்த இன்ஸ்டிடியூட் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு மாணவியிடம் சத்தியமூர்த்தி தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகாரளித்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், புகாரின் பேரில் விசாரணை நடத்தியபொழுது அவர் பலரிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. பின்னர் சத்தியமூர்த்தியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில் பல இளம்பெண்களை ஆபாசமாக போட்டோக்கள், வீடியோக்களை செல்போனில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
மேலும், அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 68 வயதாகும் சத்தியமூர்த்தி, துவாக்குடி பெல் நிறுவனத்தில் வேலைபார்த்து ரிடையர்டு ஆனவர் என்றும் இவர் 30 வருடங்களுக்கு மேல் இந்த இன்ஸ்டிடியூட் நடத்தி வருவது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.