பெண்களுக்கு பாலியல் தொல்லை : அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By Irumporai Feb 18, 2023 05:38 AM GMT
Report

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அன்பு ஜோதி ஆசிரமம்

விழுப்புரத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி இல்லத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களுக்கு போதைப்பொருள் தந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாலியல் தொல்லை : அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் | Anbu Jyoti Ashram Case Dgp Orders

சிபி சிஐடிக்கு மாற்றம்

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜோபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.