Smartphone, tabletக்கு இனி ஒரே Charger தான்.. அமலுக்கு வந்த நடைமுறை - எங்க தெரியுமா?
ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு Type-c சார்ஜரை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்தது.
Type-c சார்ஜர்
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆண்டுதோறும் பலவகை ஸ்மார்ட்போன்கள் , டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன்,டேப்லெட்கள் பலவற்றிற்கும் சார்ஜிங் பாயிண்டுகள் விதவிதமான வகைகளில் இருப்பதுண்டு.இதனால் சமீப காலங்களில் டன் கணக்கில் மின்னணு கழிவுகள் குவிந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு முதல் அனைத்து ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஐபேடுகள் போன்றவற்றில் பொதுவான சார்ஜ் போர்ட்டாக டைப்-சி போர்ட்டையே பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடைமுறை
இந்த நடைமுறையைப் பல முன்னணி நிறுவனங்கள் பின்பற்றினாலும், ஆப்பிள் மட்டும் சிறிது தயக்கம் காட்டி வருகிறது.ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தனக்கென யூஎஸ்பி கேபிள் 3 வகை சார்ஜர்களை பயன்படுத்திவருகிறது.
மேலும் ஐரோப்பிய யூனியனில் மின்னணு பொருட்களில் பொதுவான சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறை அமலுக்கு வர உள்ளது.