மொபைல் போன் திரையில் தோன்றும் பச்சை கோடு - சரி செய்வது எப்படி?
செல்போன் திரையில் தோன்றும் பச்சை கோடை எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.
பச்சை கோடு
செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களது போனை முறையாக பராமரிக்காமல் விட்டால் பேட்டரி வேகமாக இறங்குவது, ஆடியோ குறைபாடு என சில பிரச்சினைகள் ஏற்படும்.
ஆனால் சிலர் என்னதான் செல்போனை கவனமாக கையாண்டாலும் டிஸ்பிலேவில் பச்சை நிற கோடுகள் தோன்றி பெரிய செலவை வைத்து விடும்.
காரணம்
சில நேரங்களில் சாப்ட்வேர் அப்டேட் மேற்கொள்ளும் பொது இது போன்ற சிக்கல் ஏற்படும். செல்போன் திரைக்கும் மதர்போர்டிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் இந்த கோடு ஏற்படலாம்.
போன் கீழே விழுந்தாலோ தொடுதிரை அதிகப்படியான ஈரப்பதம் அல்லது வெப்பத்தால் பாதிக்கப்பட்டாலோ இந்த பச்சை கோடு ஏற்படலாம்.
சரி செய்வது எப்படி?
சில நேரங்களில் செல்போனை ரீ ஸ்டார்ட் செய்யும் போது இந்த கோடு நீங்கி விடும்.
சாப்ட்வேர் அப்டேட் செய்யாமல் இருந்தால் கூட இந்த கோடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அவ்வப்போது வெளியாகும் அப்டேட்களை மேற்கொள்ள வேண்டும்.
அப்படியும் சரி ஆகவில்லை என்றால் பவர் பட்டனை மற்றும் வால்யூமை குறைக்கும் பட்டணை நீண்ட நேரம் அழுத்தி ரீ ஸ்டார்ட் செய்யும் போது போன் Safe mode க்கு மாறும். அப்போது In Built செயலிகள் தவிர பிற செயலிகள் அணைக்கப்பட்டிருக்கும். Safe mode ல் பச்சை கோடுகள் மறைந்தால், நீங்கள் புதிதாக டவுன்லோட் செய்த செயலியால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
அதிகாரபூர்வ சேவை மையம்
உங்கள் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் back up எடுத்த பின்னர், போனை factory reset செய்யும் போது இந்த கோடுகள் பெரும்பாலும் மறைந்து விடும். back up எடுக்காமல் இதை முயற்சித்தால் போனில் உள்ள தகவல்கள் அழிந்து விடும்.
போன் கீழே விழுந்தாலோ அல்லது தண்ணீரால் பாதிக்கப்பட்டாலோ சர்வீஸ் சென்டரை நாடுவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்கலாம். டிஸ்பிளே மாற்றும் போது இந்த கோடுகள் நீங்க வாய்ப்புள்ளது.
போன் Warranty காலம் முடிவடைவதற்குள் இந்த கோடு தோன்றினால் செல்போன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சேவை மையத்தை நாடி தீர்வு காணலாம்.