Iphonenஐ ரூ 10ஆயிரத்திற்கு வாங்கலாம்.. வெளியான அட்டகாசமான சிறப்புச் சலுகை - இதை பாருங்க!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐபோன் வாங்கச் சிறப்புச் சலுகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐபோன்
iphone என்றாலே இந்தியர்களுக்கு ஒரு மோகம் இருக்கும். ஐபோன்களின் விலை அதிகம் என்றாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். சொந்தமாக ஒரு iphone வாங்க வேண்டும் என்பது சிலரின் வாழ்நாள் லட்சியமாகக் கூட இருக்கும்.
அந்த அளவுக்கு இந்தியாவில் ஐபோன்களுக்கு மவுசு அதிகம். அப்படி iphone வாங்க நினைத்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு குறைந்த விலைக்கு ஐபோன் வாங்கலாம். அதிலும் ஃபிளிப்கார்ட்டில் அசத்தலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புச் சலுகை
அதில் ஆப்பிள் புதிய iphone 16 தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போனில் ஃபிளிப்கார்ட்டில் சலுகைகள் வழங்கப்படுகிறது. iphone 16 ந் 128 ஜிபி வேரியண்ட் ரூ.79,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
256 ஜிபி ரூ.89,990 மற்றும் 512 ஜிபி ரூ.1,09,990 . இப்போது இந்த போனை ரூ.20,000 தள்ளுபடியில் வாங்கலாம். இதில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே , 48 ஃபயூஷன் கேமிரா, 12MPஅல்ட்ராவைட் கேமிரா , 12MP ட்ரூடெப்த் முன் கேமிரா, 18MP பயோனிக் சிப் உள்ளது.