அடேங்கப்பா...ரூ.5.8 லட்சத்திற்கு விலை போன ஓவியங்கள் - வைரலாகும் சிறுவனின் திறமை!
லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.5.8 லட்சத்திற்கு விலை போய் உள்ளது.
சிறுவனின் திறமை
சிறுவயதில் பொதுவாக அனைவருக்கும் வரைவதில் ஆர்வம் இருக்கும்.குழந்தைகள் வண்ணங்கள் பூசி விளையாட தொடங்குவதே ஒரு அழகியல் தான். இதை காலகட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமைகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற இச்சிறுவனின் வரையும் திறமை கடந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.
ஓவியங்கள்
சிறுவன் ஓவியம் மீது கொண்ட ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் அதற்கெனவே பிரத்யேக ஸ்டூடியோவை அமைத்து கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா அந்த படைப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கினார்.
அதில், சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்முலம் மிகவும் பிரபாலான அந்த சிறுவனின் கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.மேலும் அவரது திறமையும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.