என்னை கட்டியணைத்தது ஆப்கான் சிறுவன் அல்ல, அவன் ஒரு இந்தியன் - முஜீப் உருக்கம்!

Cricket India Afghanistan Cricket Team Mujeeb Ur Rahman
By Jiyath Oct 18, 2023 05:52 AM GMT
Report

என்னை கட்டியணைத்தது ஆப்கான் சிறுவன் அல்ல, அவன் ஒரு இந்திய சிறுவன் என்று முஜீப் உர் ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

என்னை கட்டியணைத்தது ஆப்கான் சிறுவன் அல்ல, அவன் ஒரு இந்தியன் - முஜீப் உருக்கம்! | Mujeeb Ur Rahman About Boy Tied Himself Ground

உலகக்கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து, 10 ஓவர்கள் 3 விக்கெட்களை வீழ்த்திய ஆப்கான் வீரர் 'முஜீப் உர் ரஹ்மான்' ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதனையடுத்து போட்டி முடிந்த பின்னர் முஜீப் உர் ரஹ்மானை சிறுவன் ஒருவன் அரவணைத்து அழுதான். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த இணையவாசிகள் பலர், அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று கூறிவந்தனர்.

தன்னம்பிக்கை, திறமை! 'விராட் கோலி'யை மனதார புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்!

தன்னம்பிக்கை, திறமை! 'விராட் கோலி'யை மனதார புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்!

வீரர் நெகிழ்ச்சி பதிவு

இந்நிலையில் இதுகுறித்து முஜீப் உர் ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது "அச்சிறுவன் ஆப்கான் கிடையாது. அவன் ஒரு இந்திய சிறுவன். எங்களின் வெற்றிக்கு அச்சிறுவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

என்னை கட்டியணைத்தது ஆப்கான் சிறுவன் அல்ல, அவன் ஒரு இந்தியன் - முஜீப் உருக்கம்! | Mujeeb Ur Rahman About Boy Tied Himself Ground

அந்தக் குட்டி பையனை டெல்லியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல அது ஓர் உணர்வு. டெல்லியில் எங்களுக்கு ஆதரவளித்த அற்புதமான ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் ஆதரவும் மகத்தானது. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்புக்கு நன்றி டெல்லி" என பதிவிட்டுள்ளார்.