14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

Elon Musk SpaceX
By Vinothini Jun 13, 2023 06:25 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

அமெரிக்காவில் ஒரு 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் வேலை கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி என்ற ன் 4 வயது சிறுவன். இவர் சிறுவயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருந்ததால் 11 வயதிலேயே அமெரிக்காவின் கைரான் கிளாரா என்ற பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.

elon-musk-placed-14-years-boy-in-spacex

மேலும், அவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் அவருக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. பின்னர், இவர் 2022-ம் ஆண்டில், சைபர் நுண்ணறிவு நிறுவனமான பிளாக்பெர்ட் AI-இல் இயந்திரக் கற்றல் பயிற்சியாளராக நான்கு மாதங்கள் பணியில் இருந்தார்.

எலான் மஸ்க்

இந்நிலையில், பிரபல தொழிலாதிபரான எலான் மஸ்க் அவரது space x நிறுவனத்தின் இன்ஜினீயரிங் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.

இது குறித்து அந்த சிறுவன் தனது சமூக வலைதள பக்கத்தில், ”என்னுடைய அடுத்த ஸ்டாப் ஸ்பேஸ் எக்ஸ். உலகிலேயே மிகவும் சிறப்பான நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக இணைந்து ஸ்டார்லின்க் இன்ஜினீயரிங் டீம் உடன் பணியாற்ற உள்ளேன்.

elon-musk-placed-14-years-boy-in-spacex

சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் என்னுடைய வயதை பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது” என பெருமிதமனாக கூறியுள்ளார்.