பேருந்து - மினி லாரி மோதி பயங்கர விபத்து.. துடி துடித்து பலியான 2 உயிர்!
அரசுப் பேருந்தின் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், படளையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாயாண்டி மகேஷ் வயது(20) மற்றும் உசிலவேல். இவர்கள் இருவரும் காவல் கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) தேவையான பொருட்களை ஏற்றி வந்துள்ளனர்.
அப்போது திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இன்று (அக்.25) காலை நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாயாண்டி மகேஷ் மற்றும் உசிலவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
விபத்து
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக மூன்றடைப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் மாயாண்டி மகேஷ் தூக்கத்தில் வலது புறமாக ஏறியபோது எதிர்த்திசையில் வந்த அரசுப்பேருந்து மீது மோதிய விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆனால் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.