இரட்டை குண்டுவெடிப்பு; 103 பேர் உடல் சிதறி பலி, 200 பேர் காயம் - இதுதான் காரணமா?
இரட்டை குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரட்டை குண்டுவெடிப்பு
அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானி 2020ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து அவரது உடல் கெர்மான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
யார் காரணம்?
அந்த சமயத்தில், கல்லறைக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
தற்போது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் வேண்டும் என ஈரான் அதிபரின் அரசியல் ஆலோசகர் மெஹம்மட் ஜம்ஷிதி குற்றம் சாட்டியுள்ளார்.