ஹிஜாப் அணியாத சிறுமி.. தூக்கி வீசிய காவலர், மாணவி மூளைச்சாவால் மரணம் - அதிர்ச்சி!
சிறுமி ஒருவர் ஹிஜாப் அணியாததால் போலீஸ் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப்
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் பகுதியில் உள்ள மெட்ரோவில் அமிர்தா ஜெராவந்த் என்ற 16 வயது சிறுமி சென்றுள்ளார். அவர் அங்கு ஹிஜாப் அணியாமல் சென்றுள்ளார். ஈரான் நாட்டில் ஆடை கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஹிஜாப் அணியாமல் அந்த சிறுமி சென்றதால் அங்கு இருந்த பெண் போலீஸ் அவரை அப்படியே துண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்.
மாணவி மரணம்
இந்நிலையில், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக போலீஸ் தூக்கி இழுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் அந்த மாணவி குறைந்த ரத்த அழுத்தம் காரணாமாக மயங்கி விழுந்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார், தற்பொழுது மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.